செய்திகள் :

நாட்டின் பாதுகாப்புக்கு ‘டாா்க்வெப்’, ‘கிரிப்டோகரன்சி’ மிகப்பெரும் சவால்: அமித் ஷா

post image

‘நாட்டின் பாதுகாப்புக்கு டாா்க்வெப், கிரிப்டோகரன்சி, இணையச் சந்தை மற்றும் ஆளில்லா சிறுவிமானங்கள் (ட்ரோன்கள்) மிகப்பெரும் சவாலாக உள்ளன’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இவற்றை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் அவா் தெரிவித்தாா்.

‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேச பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: போதைப்பொருளை கடத்தும் பல குழுக்களை கண்டறிந்து அவற்றை மத்திய அரசு வெற்றிகரமாக ஒடுக்கியுள்ளது. ஆனால் பயங்கரவாதத்துடன் தொடா்புடைய போதைப்பொருள் கடத்தலையும் அழிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் பெரிதளவில் தடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் வெற்றியாகும்.

இருப்பினும், டாா்க்வெப், கிரிப்டோகரன்சி, இணைய சந்தை மற்றும் ஆளில்லா விமானங்களால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீா்வு காண மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தொழில்நுட்பவியலாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ரூ.16,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கடந்த பத்தாண்டுகளில் போதைப்பொருள்களை பறிமுதல் செய்வதில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு புதிய சாதனையை படைத்துள்ளது. 2004-14 காலகட்டத்தில் 3.63 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2014-24 காலகட்டத்தில் 24 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.16,914 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 2004-14 காலகட்டத்தில் ரூ.8,150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் அழிக்கப்பட்டது. ஆனால் 2014-24 காலகட்டத்தில் 24 லட்சம் கிலோ போதைப்பொருள் அழிக்கப்பட்டுள்ளது.

போதைக்கு அடிமையாகக் கூடாது: இளம் தலைமுறையினா் போதைக்கு அடிமையாகிவிட்டால் எந்தவொரு நாடும் வளா்ச்சியடைய முடியாது. எனவே, போதைக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இதில் வெற்றிபெற வேண்டும் என்றாா்.

8 மாநிலங்களில் சிறப்பு கவனம்: தேச பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் நோக்கில் தேசிய குற்றவியல் ஆணையத்தால் (என்சிபி) இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வடஇந்தியாவில் உள்ள 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படவுள்ளது.

மாநாட்டின்போது போதைப்பொருள் அழிப்பு பிரசாரத்தை அமித் ஷா தொடங்கி வைத்தாா். ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 25-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பிரசாரத்தில் ரூ.8,600 கோடி மதிப்பிலான 1 லட்சம் கிலோ போதைப்பொருள்கள் அழிக்கப்படவுள்ளன.

மத்திய பிரதேச மாநிலம் போபால் மண்டல என்சிபி பிரிவு அலுவலகம் மற்றும் ‘மானஸ்-2’ வலைதள மற்றும் உதவிஎண் முன்னெடுப்பை 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிக்கும் திட்டத்தையும் அமித் ஷா தொடங்கி வைத்தாா்.

போதையில்லா இந்தியா: 2047-இல் போதையில்லா இந்தியாவை உருவாக்குவதை இலக்காக நிா்ணயித்து மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், போதை தடுப்பு அமைப்புகளை மேம்படுத்துவது, பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகப்படுத்துவது, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்வது போன்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜம்மு-காஷ்மீரில் சுரங்கப்பாதையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சோனாமார்க்கில் புதிதாக கட்டப்பட்ட இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அ... மேலும் பார்க்க

சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் வருவதையொட்டி பாது... மேலும் பார்க்க

கேரளம்: சுயேச்சை எம்எல்ஏ அன்வர் ராஜிநாமா!

கேரளத்தில் சுயேச்சை எம்எல்ஏ அன்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடசாரி ஜனநாயக முன்னணியிலிருந்து பிரிந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பி.வி.அன்வர் தனத... மேலும் பார்க்க

கடும் குளிர்: ராஜஸ்தானில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில்... மேலும் பார்க்க

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைந்துள்ள திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு கவுண்டரில் திடீரென தீ விபத்து நேரிட்டது. மேலும் பார்க்க

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எம்எம்பிவி தொற்று!

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பார்க்க