செய்திகள் :

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

post image

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.

இந்த நதிக்கு பல பெருமைகள் இருந்தாலும், நாட்டில் ஆணின் பெயரைக் கொண்டிருக்கும் ஒரே நதி என்ற பெருமையும் உள்ளது.

அந்த நதி பிரம்மபுத்திரா.. இந்த நிதியே, பிரம்மனின் குழந்தை என்ற ஒரு புராண கால நம்பிக்கையும் உள்ளது. பிரம்மனுக்கும் அமோகா என்ற அழகிய பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு, அவர்களுக்குப் பிறந்த குழந்தையே இந்த பிரம்மபுத்திரா நதி என்றும் வழங்கப்படுகிறது.

பிரம்மபுத்திரா என்பதற்கு, பிரம்மனின் மகன் என்று பொருள். இந்த நதி இமாலயத்தில் தொடங்கி திபெத் வழியாக 2,900 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்தோடுகிறது. அதனாலேயே, இது உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாகவும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில், அசாம் வழியாக பாய்ந்தோடி வங்கதேசம் சென்று பிறகு வங்கக் கடலை அடைகிறது.

மற்ற நதிகளைப் போல அல்லாமல், பிரம்மபுத்திரா நதி ஆக்ரோஷமாக பாய்ந்தோடுவதால், இதற்கு ஆண் பெயர் சூட்டப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

8வது ஊதியக் குழு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: அரசு ஊழியர்களுக்கான 8வது ஊழியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு ... மேலும் பார்க்க

சயீஃப் அலிகான் வீட்டுக்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி?

நடிகர் சயீஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த வெளிநபர், கத்தியால் குத்தியதில், அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார், அவர் எப்படி வீட்டுக்குள் நுழைந்தார் ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு: புதிய கண்காணிப்புக் குழு அமைப்பு

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய குழுவை அமைத்தது மத்திய அரசு... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் திட்டம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை ... மேலும் பார்க்க

ரூ.2,000 கோடிக்கு களைகட்டிய சேவல் பந்தயம்! வேடிக்கை பார்த்தே ரூ.1.25 கோடி வென்ற சேவல்!

ஆந்திரத்தில் நடைபெற்ற சேவல் சண்டை போட்டியில் இந்தாண்டு மட்டும் பந்தயத்தொகை ரூ.2,000 கோடியைத் தாண்டியுள்ளது. அதிலும், ஒரு சேவல் சண்டையே போடாமல் வேடிக்கை மட்டும் பார்த்து ரூ.1.25 கோடியை வென்றிருக்கிறது.... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற நீதிபதியாக வினோத் சந்திரன் பதவியேற்பு!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரனுக்கு இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பார்க்க