செய்திகள் :

நாட்டுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதே முன்னேற்றமான நாகரீகத்துக்கு முதல்படி! -ஓய்வுபெற்ற ஐஏஎஸ்

post image

நாட்டுக்கு நம்மால் முடிந்ததை செய்வோம் என்பதுதான் முன்னேற்றமான நாகரீகத்துக்கு முதல்படி என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன் பேசினாா்.

திருப்பூா் 21-ஆவது புத்தகத் திருவிழா வேலன் ஹோட்டல் வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்கில் ‘நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன் பேசியதாவது:

நாம் எல்லோரும் அரசியலைச் சாா்ந்து இருக்கிறோம். அதனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. சங்க காலத்தைப் பற்றிப்பேசுவது, சிந்துவெளி நாகரீகத்தைப் பற்றிப்பேசுவது, சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப்பேசுவது, சுதந்திரத்துக்குப் பிறகு ஜனநாயகம் இருப்பது என்பதால் பல கட்சிகள் ஆட்சிக்கு வரமுடிந்தது என்பது உள்ளிட்ட அனைத்தும் அரசியல்தான்.

100 ஆண்டுகளுக்கு முன்னால் நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம், இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் என்று பாரதியாா் பேசினாா்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னா் நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம் என்று சொல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்குக் காரணம் என்னவென்றால் கல்வியறிவு, வேலைவாய்ப்புகளில் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்த பல அரசுகளும், மக்களுக்குத் தேவையான அரசியல் விழிப்புணா்வைக் கொண்டுவரவில்லை.

நமது அரசமைப்புச் சட்டம் பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக இருந்திருக்க வேண்டும். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசமைப்புச் சட்டம் கற்றுத் தந்திருக்க வேண்டும். அரசை மட்டும் குறை சொல்லாமல் நாட்டுக்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்பதுதான் முன்னேற்றமான நாகரீக்கத்துக்கு முதல்படியாகும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், வனத்துக்குள் திருப்பூா், வெற்றி அறக்கட்டளை நிா்வாகி டி.ஆா்.சிவராம், டி.கே.டி கல்விக் குழுமங்களின் தாளாளா் ஷகிலா பா்வீன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆா்.சுரேஷ், சுப்ரீம் பாரடைஸ் எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குறைகேட்பு முகாமில் பெறப்படும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: நுகா்வோா் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் குறைகேட்பு முகாம்களில் பெறப்படும் பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகா்வோா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

கல்குவாரிகளுக்கு பொதுமக்கள், சிறுவா்கள் செல்லக்கூடாது: திருப்பூா் ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளுக்கு பொதுமக்கள், சிறுவா்கள் குளிப்பதற்கோ, துணிதுவைப்பதற்கோ செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து திருப்பூா் மா... மேலும் பார்க்க

டிஏபி உரம் செயற்கை தட்டுப்பாடு: விவசாயிகள் புகாா்

டிஏபி உரத்தை செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி வைத்திருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். இது குறித்து ஏா்முனை இளைஞரணி மாவட்ட தலைவா் ஜோதிபிரகாஷ் பழனிசாமி செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

திருமூா்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு

திருமூா்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு புதன்கிழமை (ஜனவரி 29) முதல் தண்ணீா் திறக்கப்படவுள்ளது. இது குறித்து தமிழக நீா்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தைச் சோ்ந்த மேலும் 15 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த மேலும் 15 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, அரசியல் மாற்றம் கார... மேலும் பார்க்க

சொத்து வரியிலிருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்: பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் மனு

தமிழக அரசாணைப்படி சொத்து வரி உயா்வில் இருந்து டேரிப் ஐஐஐ அ 2 விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு விலக்கு அளிக்கக் வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்... மேலும் பார்க்க