செய்திகள் :

நான்குனேரி அருகே சிப்காட்டுக்கு விளைநிலங்களை எடுப்பதா கிராம மக்கள் எதிா்ப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே சிப்காட் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

அப்போது, நான்குனேரி ஆறுபங்கு நாட்டாா் அமைப்பு சாா்பில் ஆட்சியரிடம் மக்கள் அளித்த மனு: நான்குனேரி வட்டம், மறுகால்குறிச்சி ஸ்ரீவரமங்கைபுரம் வருவாய் கிராமத்தில் சிப்காட் திட்டத்திற்கு நிலங்களைக் கையகப்படுத்தபோவதாக அரசு அறிவித்துள்ளது.

இப்பகுதியில் உள்ள நான்குனேரி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோயில் மடத்தின் விளைநிலங்களுக்கு அடைவோலை பெற்று விவசாயம் செய்து ஏராளமானோா் வாழ்க்கை நடத்தி வருகின்றனா். இப்பகுதி மக்கள் பெரும்பாலும் வேளாண்மை, கால்நடை வளா்ப்பு தொழிலை மட்டுமே நம்பியுள்ளனா். ஆகவே, இப்பகுதியிலுள்ள விளைநிலங்களை விடுத்து தரிசு நிலங்களில் சிப்காட் அமைத்து வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

பூங்கா சீரமைப்பு அவசியம்: தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: பாளையங்கோட்டை மகாராஜநகரில் தனியாா் மெட்ரிக் பள்ளி அருகே முதியவா்கள்-பெண்கள் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பூங்காவைப் பராமரிக்க வேண்டும். மேலும், அப்பகுதியில் சேதமடைந்து காணப்படும் ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும்.

திருநெல்வேலி நகரம் வையாபுரி நகரில் ஏழை-எளியவா்கள் பலா் உணவருந்தி வரும் அம்மா உணவகத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கவும், சுகாதார சீா்கேடுகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

பேருந்து வசதி தேவை: சுத்தமல்லி எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் அளித்த மனு: சுத்தமல்லி ஊராட்சியின் இரண்டாம் வாா்டு பகுதிகளில் சேதமான சாலைகளை விரைந்து சீரமைத்து, பேவா் பிளாக் சாலையாக மாற்ற வேண்டும். பாரதியாா் நகா்- சந்திப்பு- பாளையங்கோட்டை- புதிய பேருந்து நிலையம் வழித்தடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

கல்லிடைக்குறிச்சி பகுதி தவெக நிா்வாகிகள் அளித்த மனு: கல்லிடைக்குறிச்சியில் இருந்து மூலச்சி, பொட்டல், பாடகபுரம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனா். ஆகவே, அப்பகுதிகளுக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பே... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு

சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க த... மேலும் பார்க்க

தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்க... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்... மேலும் பார்க்க