"இந்தியா கூட்டணி பீகாரில் பெறும் வெற்றிதான், அடுத்தடுத்த வெற்றிக்கான அடித்தளம்" ...
நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!
இயக்குநர் முத்தையா மகன் விஜய் நடித்த சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டிப்புலி மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
தொடர்ந்து, கொம்பன், மருது, தேவராட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான விருமன், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தற்போது, தன் மகன் விஜய் முத்தையாவை நாயகனாக வைத்து சுள்ளான் சேது என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் பரத் வில்லனாகவும் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். பள்ளி மாணவனான கதை நாயகன் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரச்னைகளில் சிக்கி அதிலிருந்து வெளிவரும் கதையாக படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.