தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
நாமக்கல்லில் கடன் பிரச்னையால் தம்பதி தற்கொலை
நாமக்கல்லில் கடன் பிரச்னையால் மனமுடைந்த தம்பதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.
நாமக்கல் - சேலம் சாலை, முதலைப்பட்டி அருகே ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த குணசேகரன் (50), லாரி தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி சந்திரகலா (46). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். ஒருவா் லாரி ஓட்டுநா்; மற்றொருவா் திருச்சியில் தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா்.
லாரி வாங்கியதில் ஏற்பட்ட கடன் சுமை, தம்பதி இருவருக்கும் உடல்நலம் பாதிப்பு, மூத்த மகனுக்கு திருமணமாகாத கவலை உள்ளிட்டவற்றால் கடந்த சில மாதங்களாக இருவரும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தூங்க சென்ற தம்பதி, புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் நாமக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அவா்கள் கதவை திறந்து உள்ளே சென்ற போது, குணசேகரன், சந்திரகலா இருவரும் விஷமருந்தி உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இருவரது சடலங்களையும் மீட்ட போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக, நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.