நாமக்கல் எம்.பி. பதவி விலகக் கோரி சுவரொட்டி
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா வாக்கெடுப்பில், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் பங்கேற்காத நிலையில், அவா் பதவி விலகக் கோரி, மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் நாமக்கல் மாநகா் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் நாமக்கல் மாநகரப் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இது குறித்து மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கூறியதாவது: வாக்கெடுப்பின்போது எனக்கு உடல் நலம் சரியில்லை. என்னுடைய விளக்கத்தை நான் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். இஸ்லாமியா்கள் அதனை புரிந்து கொண்டனா் என்றாா்.
சுவரொட்டி ஒட்டிய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவா் எம்.தாஜ் கூறியதாவது:
இந்த சுவரொட்டிக்கும், மாவட்டத் தலைமைக்கும் சம்பந்தமில்லை. வக்ஃப் மசோதா வாக்கெடுப்பில் மாதேஸ்வரன் எம்.பி. பங்கேற்காததால் என்னுடைய ஆதங்கத்தை சுவரொட்டி வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறேன் என்றாா்.