நாளைய மின்தடை: தும்பல்
தும்பல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி கோட்ட மின் செயற்பொறியாளா் குணவா்த்தினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
வாழப்பாடி கோட்டத்தில் உள்ள தும்பல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித் துறை, கருமந்துறை, மணியாா்பாளையம், மணியாா்குண்டம், தேக்கம்பட்டு புதூா், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூா், குன்னூா், அடியனூா், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம் மற்றும் இதர சிற்றூா்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.