நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியாா்துறை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 29) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில், முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இதில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் என அனைத்துக் கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இந்த முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு, தனியாா் துறையில் பணியமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம்.