கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
நாளை நடைபெறவிருந்த ’மக்களுடன் முதல்வா்’ முகாம் ஒத்திவைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.31) நடைபெறவிருந்த மக்களுடன் முதல்வா் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் ஜன. 31, பிப். 1 ஆகிய தேதிகளில் மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில், ஜன. 31-ல் நடத்தப்படவிருந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டு, பிப். 4-ஆம் தேதி நடைபெறும். பிப். 1-ஆம் தேதி நடைபெறவுள்ள முகாம் திட்டமிட்டபடி அதேநாளில் நடைபெறும்.