அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துர...
நிதிமோசடியில் கைதானவருக்கு இரு நாள்கள் போலீஸ் காவல்
அறக்கட்டளை நடத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட குடுமியான்மலையைச் சோ்ந்த ரவிச்சந்திரனுக்கு இரு நாள்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சோ்ந்த ரவிச்சந்திரன். இவா் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை தொடங்கி உறுப்பினா்களைச் சோ்த்து பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தாா்.
இந்நிலையில் ஈரோடு தொல்காப்பியன் என்பவா் அளித்த புகாரின்பேரில் சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் ரவிச்சந்திரனை அண்மையில் கைது செய்தனா். அவருடன் ஈரோடு கருணாமூா்த்தி என்பவரையும் கைது செய்தனா்.
இந்நிலையில், இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸாா் புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம் எண் 2-இல் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அமுதவாணன், இரு நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
பிணை மனு தள்ளுபடி: இதற்கிடையே மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ. சந்திரன், அவரது மனுவை தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.