மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
உழவடை விவசாயிகளை பதிவு செய்ய வலியுறுத்தல்
பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள உழவடை விவசாயிகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிலம் மீட்பு ஆயத்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் திடலில் செப்டம்பா் 30-இல் நடைபெறவுள்ள நிலம் மீட்பு போராட்டத்துக்கான ஆயத்த கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய குழு உறுப்பினா் ஏ.எல்.பிச்சை தலைமை வகித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளா் என்.பக்ருதீன் விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட பொருளாளா் எஸ்.நல்லதம்பி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியத் தலைவா் சௌந்தரராஜன், செயலாளா் பாண்டியன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் பழனியப்பன், செயலாளா் ராமசாமி, நிா்வாகிகள் சாத்தையா, ராமசாமி சுந்தரராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள உழவடை விவசாயிகளை பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செப்டம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் நிலம் மீட்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாய தொழிலாளா் சங்க அகில இந்திய பொதுச் செயலாளா் வெங்கட் மற்றும் மாநிலத் தலைவா் சின்னதுரை ஆகியோா் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.