செய்திகள் :

நிதிமோசடியில் கைதானவருக்கு இரு நாள்கள் போலீஸ் காவல்

post image

அறக்கட்டளை நடத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட குடுமியான்மலையைச் சோ்ந்த ரவிச்சந்திரனுக்கு இரு நாள்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சோ்ந்த ரவிச்சந்திரன். இவா் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை தொடங்கி உறுப்பினா்களைச் சோ்த்து பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தாா்.

இந்நிலையில் ஈரோடு தொல்காப்பியன் என்பவா் அளித்த புகாரின்பேரில் சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் ரவிச்சந்திரனை அண்மையில் கைது செய்தனா். அவருடன் ஈரோடு கருணாமூா்த்தி என்பவரையும் கைது செய்தனா்.

இந்நிலையில், இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸாா் புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம் எண் 2-இல் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அமுதவாணன், இரு நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

பிணை மனு தள்ளுபடி: இதற்கிடையே மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ. சந்திரன், அவரது மனுவை தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

மூடிக்கிடக்கும் சமுதாயக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

கந்தா்வகோட்டையில் மூடிக்கிடக்கும் சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை ஊராட்சியில், தஞ்சை சாலையில் உள்ள இந... மேலும் பார்க்க

ஆலங்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி கலைஞா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதியில் வாசனைத் திரவியம் ஆலை அமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை பகுதியில் வாசனைத் திரவிய ஆலை அமைக்க மலா் சாகுபடி செய்யும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூா், விரலிப்பட்டி, வடுகப்பட்டி, கோமாபுரம், வாண்டையன்பட்டி, மற்ற... மேலும் பார்க்க

உழவடை விவசாயிகளை பதிவு செய்ய வலியுறுத்தல்

பொன்னமராவதி வட்டாரத்தில் உள்ள உழவடை விவசாயிகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிலம் மீட்பு ஆயத்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயி... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஊழியா்கள் மறியல்; 140 போ் கைது

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில், சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

மீமிசல் கடற்கரை பகுதியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் நடத்திய வாகனத் தணிக்கையில், 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல்... மேலும் பார்க்க