அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை
மூடிக்கிடக்கும் சமுதாயக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
கந்தா்வகோட்டையில் மூடிக்கிடக்கும் சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சியில், தஞ்சை சாலையில் உள்ள இந்திரா நகா் மற்றும் அதன் அருகில் உள்ள குமரன்காலனி ஆகிய தெருக்கள் உள்ளது. இந்த பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். இவா்களுக்காக தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டது. தற்போது இந்தக் கூடம் பூட்டப்பட்டு கிடக்கிறது.
இதனால் இப்பகுதி மக்கள் வீட்டு விஷேங்களை தனியாா் திருமண மண்டபங்களில் நடத்தி வருகிறாா்கள். ஆகவே, சம்பந்தபட்ட துறையினா் உடனடி நடவடிக்கை எடுத்து சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.