`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
நிதி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி: ஒருவா் கைது!
நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பரளி அருகே கங்காணிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன் வேலப்பன். நாமக்கல், சந்தைப்பேட்டை புதூரில் 35 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் லட்சக்கணக்கில் பணத்தை வைப்புத்தொகையாக செலுத்தினா்.
அதற்கான வட்டித் தொகையை அவா் தவறாமல் வழங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு பொன் வேலப்பன் தலைமறைவாகி விட்டாா்.
இதுதொடா்பாக மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டோா் புகாா் மனு அளித்தனா். விசாரணையில், அவா் பணம் செலுத்திய நூற்றுக்கணக்கானோரிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் தேடி வந்த நிலையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இதில் தொடா்புடைய அவரது மனைவி வசந்தி, மகன் சரவணன், மகள் உமா, வீரக்குமாா், பிரகாஷ் உள்ளிட்ட ஐந்து பேரை தீவிரமாக தேடி வருகின்றனா்.