செய்திகள் :

`நிதி நெருக்கடி' - மதுபான விலையை 85% வரை உயர்த்திய மகாராஷ்டிரா அரசு; அதிர்ச்சியில் மது பிரியர்கள்

post image

மகாராஷ்டிராவில் மதுபான விலையை மாநில அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் படி மதுபானங்கள் மீதான கலால் வரியை மாநில அமைச்சரவை 78 முதல் 85 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. இதன் படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களில் விலை 90 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு குவாட்டர் விலை 205 முதல் 215 வரை இனி விற்கப்படும்.

பிரிமியம் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை 9-12 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர நாட்டுச்சாராயத்திற்கான கலால் வரியும் 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குவாட்டர் விலை ரூ.10-15 வரை அதிகரிக்கும். மேலும் பெர்மிட் ரூம் மற்றும் மதுபானக்கடைகளின் வருடாந்திர லைசென்ஸ் கட்டணம் 10-15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானத்திற்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன் ஆரம்ப கட்ட குவாட்டர் விலை ரூ.150-ல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் இந்த திடீர் மதுபான விலை அதிகரிப்பு குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகாராஷ்டிரா அரசு ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது.

பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் லட்கி பெஹின் யோஜனா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மாநில அரசு கடுமையான சவாலை சந்தித்து வருகிறது. எனவே மதுபானங்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் 14000 கோடி நிதி திரட்ட அரசு திட்டமிட்டு இருக்கிறது.

அதேசமயம் ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு பீர் பார் உரிமையாளர்கள் மற்றும் மதுபானக்கடை உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இக்கட்டண உயர்வால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 2011ம் ஆண்டு கடைசியாக மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டது.

Trump: ``இஸ்ரேல் - ஈரான் என்னிடம் அமைதி ஏற்படுத்த கோரிக்கை வைத்தது; ஆனால்..'' - டிரம்ப் சொல்வதென்ன?

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இரு நாடுகளுக்கு... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா சாலையில் தொங்கும் கேபிள் வயர்; அச்சத்துடன் கடக்கும் மக்கள்.. அதிகாரிகள் கவனிப்பார்களா?

சென்னை அண்ணா சாலை, நந்தனம் தேவர் சிலை சந்திப்பில் அமைந்துள்ளது நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம்.சென்னையின் மிகவும் பரபரப்பான சந்திப்பு சாலைகளில் இந்த சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான பகுத... மேலும் பார்க்க

Iran Vs Israel: ``அமெரிக்கா நம்பகத்தன்மையை இழந்துவிட்டது" - ஈரானுக்கு ஆதரவாக ஐ.நா.வில் சீனா

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. மத்திய கிழக்கில் உடனடி, நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு வ... மேலும் பார்க்க

US Strikes on Iran: ``மிகப்பெரிய குற்றம், தண்டிக்கப்பட வேண்டும்'' - காமேனியின் முதல் ரியாக்‌ஷன்

ஒரு வாரத்திற்கும் மேலாக, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. நேற்று முன்தின இரவில், அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி திட்டப் பகுதிகளைத் தாக்கியது. ஈரானை அமெரிக்கா தாக்கிய பின்னர், மு... மேலும் பார்க்க