செய்திகள் :

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 37 போ் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் உத்தரப்பிரதேச அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமாஜ்வாதி தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் மக்களவையில் பேசியபோது, ``மகா கும்பமேளாவில் உயிரிழந்தோா் எண்ணிக்கையை மத்திய அரசும், மாநில அரசும் மூடி மறைக்கிறது. இச்சம்பவம் தொடா்பான விவரங்கள் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்." எனப் பேசினார்.

மகா கும்பமேளா
மகா கும்பமேளா

இதற்கிடையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சௌமித்ரா தயாள் சிங், சந்தீப் ஜெயின் அமர்வு, ``கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் கடமை. அதை இன்னும் ஏன் நிறைவேற்றவில்லை?

இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததும் கண்டனத்துக்குரியது. மக்களின் துயரத்தைப் பற்றி மாநில அரசுக்கு அக்கறையில்லை என்றே நாங்கள் கருதுகிறோம்.

கும்பமேளாவில் இறந்தவர்களின் விவரங்கள், அவர்களுக்கு செலுத்தப்பட்ட, செலுத்தப்பட வேண்டிய இழப்பீடு தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில்தான் பிபிசி இந்தி கும்பமேளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 அல்ல, 80 என அதிர்ச்சிகரச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

யோகி ஆதித்யநாத்

பிபிசியின் செய்தியைக் குறிப்பிட்ட காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்கள் மறைக்கப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது.

கொரோனா தொற்றின் போது ஏழைகளின் உடல்கள் புள்ளிவிவரங்களிலிருந்து அழிக்கப்பட்டது. ஒவ்வொரு பெரிய ரயில் விபத்துக்குப் பிறகும் உண்மை மறைக்கப்படுகிறது. இதுதான் பா.ஜ.க-வின் மாதிரி அரசியல். ஏழைகளின் மரணங்கள் கணக்கிடப்படுவதுமில்லை, அதற்கு பொறுப்புக் கூறப்படுவதுமில்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``ஜனவரி 29 அன்று மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உத்தரபிரதேச அரசு பொய்க் கூறுவதாக, உண்மையை மறைப்பதாக முன்னரே குறிப்பிட்டிருந்தேன். தவறான புள்ளிவிவரங்களை வழங்கி மக்களின் நம்பிக்கையை சிதைப்பவர்கள், பொதுமக்களின் நம்பிக்கைக்கு தகுதியற்றவர்கள்" என்றார்.

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்?

Doctor Vikatan: அலுவலகத்தில்இருக்கும்போது அடிக்கடி கொட்டாவி வருகிறது. அடிக்கடி தண்ணீர் குடிப்பது, இரவு 8 மணி நேரம் தூங்குவது உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருந்தாலும், கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது... ... மேலும் பார்க்க