செய்திகள் :

நினைவேந்தல் நிகழ்வில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு!

post image

அஸ்ஸாம் மாநிலத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் பிரதீவ்ப் கோகய் என்பவரின் தாயாருக்கு நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உறவினர்கள் பலரும் பஸ்கோரியா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர்.

அங்கு நேற்று இரவு அனைவருக்கும் ’ஜால்பன்’ திண்பண்டம் உண்ணக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் அங்கிருந்த பலருக்கும் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய உடல்கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

இதனைத் தொடர்ந்து, 53 பேர் உடனடியாக அருகாமையிலிருந்த சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் ஜொராத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 150 பேருக்கு, சிறிய அளவிலான உடல் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அவர்களின் வீடுகளில் வைத்தே அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க | துப்பாக்கி முனையில் ரூ. 2 கோடி நகை, பணம் கொள்ளை!

மற்றவர்களுக்கு உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ விஸ்வஜித் புகான் மருத்துவமனைக்கு விரைந்து, அனைவரின் உடல்நிலை குறித்தும் நலம் விசாரித்தார்.

அதுமட்டுமின்றி அவர்களின் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தி அனைவரின் உடல்நிலை குறித்தும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

கள்ளச்சாராயம் அருந்தி 37 போ் உயிரிழந்த சம்பவம்: பிகாரில் 7 பெண்கள் உள்பட 21 போ் கைது; 2 காவலா்கள் இடைநீக்கம்

பிகாரின் சரண், சிவான் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 37 போ் உயிரிழந்த நிலையில், அதில் தொடா்புடையதாக 7 பெண்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 2 காவலா்கள் பணி இடைநீக்க... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: மருத்துவர் உள்பட 6 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 200 பேருக்கு உடல்நலக் குறைவு

துக்க நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டதால் 200 பேருக்கு ஒவ்வாமை உண்டாகி உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பஸ்கோரியா கிராமத்தில் துக்க நிகழ்ச... மேலும் பார்க்க

ராஜஸ்தான் கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் பலி: மோடி இரங்கல்

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்தி மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 ல... மேலும் பார்க்க

லடாக் ஆதரவாளர்கள் 15 நாள்களாக உண்ணாவிரதம்: பிரதமரை சந்திக்க கோரிக்கை!

புதுதில்லியில் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பருவநிலை விஞ்ஞானி சோனம் வாங்க்சக் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.லடாக் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் ம... மேலும் பார்க்க

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

தனது மனைவி நலமுடன் வாழ வேண்டுமென்பதற்காக உண்ணா நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார் பாஜக எம்.பி. ஒருவர்.கணவர் ஆரோக்கியமாக நெடுநாள் வாழ வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் இல்லத்தரசிகள் கடைப்பிடிக்கு... மேலும் பார்க்க