செய்திகள் :

``நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' - விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்கான் நெகிழ்ச்சி

post image

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அவரது மனைவி பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை கொண்டாடினர்.

இதில் கலந்துகொள்வதற்காக ஹைத்ராபாத் சென்றுள்ளார் பாலிவுட் நடிகர் ஆமிர் கான். அவரது வருகையால் விழா எமோஷனலாகவும் சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது. குழந்தைக்கு மீரா எனப் பெயர் சூட்டினார் ஆமிர் கான்.

பெயர் சூட்டு விழாவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் விஷ்ணு விஷால் - ஜ்வாலா கட்டா தம்பதி.

ஆமிர் கானின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "எங்கள் 'மீரா'!

இதற்கு மேல் என்ன வேணும்!

ஆமிர் இல்லாமல் இந்த பயணம் சாத்தியமாகியிருக்காது!

நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.

அழகான சிந்தனைமிக்கப் பெயருக்கு நன்றி!" எனப் பதிவிட்டிருந்தார்.

mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations
mira naming celebrations

நடிகர் விஷ்ணு விஷால் அவரது இன்ஸ்டாகிராமில், "எங்கள் மீராவை அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் குழந்தைக்குப் பெயரிட ஹைத்ராபாத் வரை வந்த ஆமிர்கான் சாருக்கு மிகப் பெரிய ஹக். மீரா என்பது நிபந்தனையற்ற அன்பையும் அமைதியையும் குறிக்கிறது. ஆமிர் சாருடன் இன்று வரையிலான பயணம் மேஜிக்கலாக இருக்கிறது. எங்கள் குழந்தைக்கு அழகான பெயரை சூட்டியதற்கு நன்றி ஆமிர் சார்." எனப் பதிவிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு முதல் காதலித்து, 2021-ல் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கம்.

கடந்த 2023ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது ஆமிர்கான் மற்றும் விஷ்ணு விஷால் ஒன்றாக மீட்கப்பட்டனர். ஆமிர்கானின் மகள் இரா கான் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் - ஜ்வாலா கட்டா தம்பதி அழைக்கப்பட்டிருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருவரும் நல்ல நட்புறவில் நீடித்து வருகின்றனர்.

Killer: "ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்" - மீண்டும் இணையும் ரஹ்மான் x SJ சூர்யா கூட்டணி

எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் கில்லர் திரைப்படத்தை அவரே இயக்குகிறார். இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கில்லர் படத்தின் பூஜை கடந்த ஜூன் 30ம் தேதி நடைபெற்றது.... மேலும் பார்க்க

Coolie:``இரண்டு வருடமாக No Family, No Friends, No Social media; காரணம்..." - லோகேஷ் கனகராஜ்

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் `கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருந்தது.`லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜுனா, சத்... மேலும் பார்க்க

Lijomol Jose: ''`ஜெய் பீம்' செங்கேணி கதாபாத்திரம் என் வாழ்க்கையையே மாற்றியது!" - லிஜோமோல் பேட்டி

உணர்ச்சி மிகுந்த தத்ரூபமான நடிப்பால் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் லிஜிமோல் ஜோஸ். Freedom Movieசசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள "ஃப்ரீடம்" திரைப்படம் ... மேலும் பார்க்க

Phoenix: "அப்பா படம் பார்த்துட்டு செம ஹாப்பி!" - கோவையில் சூர்யா சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஃபீனிக்ஸ்'. ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். சூர்யா சேதுபத... மேலும் பார்க்க

Paranthu Po: "ராம் அண்ணா, நீங்கள் எப்போதும்..." - 'பறந்து போ' குறித்து இயக்குநர் அட்லி

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படத்திற்கு மக்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. Parandhu Po மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப... மேலும் பார்க்க