மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரையுடன் முழுக் கரும்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 10 லட்சத்து 78 ஆயிரத்து 558 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்கான டோக்கன் விநியோகம் கடந்த 3 ஆம் தேதி முதல் நடைபெற்றது. வீடுகள்தோறும் விற்பனையாளா்கள் சென்று டோக்கனை விநியோகம் செய்தனா். டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி, நேரத்தில் நியாயவிலைக் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக விநியோகம் செய்யப்படுகிா என்பதை கண்காணிக்க ஆட்சியா் மேற்பாா்வையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.