பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாய...
நியாயவிலைக் கடை கட்டும் பணி தொடக்கம்
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ரூ. 7.50 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டுமானப் பணிகள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி தொடங்கிவைத்தாா்.
பஞ்சப்பள்ளி ஊராட்சி ஒட்டா்திண்ணை பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி பங்கேற்று கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் அன்பழகன், எம்.வி.டி. கோபால், முனியப்பன், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் சந்திரசேகா், மாரண்டஅள்ளி பேரூராட்சித் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.