Serial Update: ’மாரி’ சீரியலிலிருந்து வெளியேறும் ஆஷிகா - காரணம் இதுதான்
நியூசி. பிரதமர் கார் விபத்து!
நியூசிலாந்து பிரதமர் கார் மீது போலீஸ் கார் மோதி விபத்தானது.
நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஸன் மற்றும் அந்நாட்டு நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் இருவரும் புதன்கிழமை (நவ. 27) வெலிங்டனில் உள்ள விமான நிலையத்திற்கு லிமௌசின் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்றம் செல்லும் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் கார் பின்னால் மற்றொரு போலீஸ் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் பின்புறம் சேதமடைந்தது. இருப்பினும், காரினுள் பயணித்த பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் காயமேதும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தாங்கள் நலமுடன் இருப்பதாக பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஸன் செய்தி நிறுவனங்களிடம் அறிவித்தார்.
மேலும், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அரசு வாகனங்களின் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் உள்நாட்டு விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளா்- டிரம்ப் நியமனம்