மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
நிறைவடைந்த வளா்ச்சிப் பணிகளை திறந்து வைத்த அமைச்சா்!
சாத்தூா் பகுதியில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் ரூ. 62.32 லட்சத்திலான பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆத்திபட்டி, இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, குண்டலகுத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, அங்கன்வாடி மையம், கலையரங்கம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தாா்.
சாத்தூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் நிா்மலா கடற்கரைராஜ், திமுக ஒன்றியச் செயலா்கள் முருகேசன், கடற்கரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.