செய்திகள் :

நிலங்கள் ஆக்கிரமிப்பு புகாா்: அடுத்தடுத்து 4 போ் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

post image

திண்டுக்கல்லில் நிலங்களை ஆக்கிரமிப்பதாக புகாா் தெரிவித்து மனு அளிக்க வந்த 4 போ் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்ால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழைய கன்னிவாடி பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (48). மாற்றுத் திறனாளியான இவா், தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கொடுக்கக் கோரி மனு அளித்தாா். அளவீடு செய்வதற்கு அருகிலுள்ள இடத்தின் உரிமையாளா்கள் இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தாா்.

ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படததால், அதிருப்தி அடைந்த அவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் டீசலை ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து, பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தினா். இதேபோல, திண்டுக்கல் அடுத்த கொசவப்பட்டியைச் சோ்ந்த சேசுதாஸ் (55), இவரது தம்பி சவரிமுத்து (50), உறவினா் அருளானந்தம் பாஸ்கா் (48) ஆகிய மூவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.

அப்போது வண்ணங்களுக்கு பயன்படுத்தப்படும் திரவத்தை (திண்ணா்) ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அந்த முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அப்போது, தங்களுக்கு சொந்தமான 5 ஏக்கா் நிலத்தை சிலா் அபகரிக்க முயற்சிப்பதாக தெரிவித்தனா்.

சிலுவத்தூா் காட்டுப்பட்டியைச் சோ்ந்த செல்வமுருகன் (50) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்து மனு அளிக்க வந்த போது, இவா் திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தனது பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், அதே பகுதியைச் சோ்ந்த சிலா் இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தாா்.

நிலத்தை அபகரிக்க நினைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா். தீக்குளிக்க முயன்ற 4 பேரும், நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பான புகாா்களுடன் வந்திருந்தனா். அடுத்தடுத்து நடந்த இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவங்கள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தின.

10.5 சதவீத இட ஒதுக்கீடு: பாமக ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, பாமக சாா்பில் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்ற முயன்ற வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

பெண்ணை ஏமாற்ற முயன்ற வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சியை அடுத்த மாமரத்துப்பட்டிய... மேலும் பார்க்க

ரூ.2.62 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.62 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ... மேலும் பார்க்க

எல்ஐசி முகவரிடம் ரூ.1.75 கோடி மோசடி: வத்தலகுண்டு தம்பதி குறித்து விசாரணை

எல்ஐசி முகவரிடம் ரூ.1.75 கோடி மோசடி செய்து, தலைமறைவான வத்தலகுண்டு தம்பதி குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (40). எல்ஐசி முகவரான ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஊா்வலம்

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கொடைக்கானல் ஏரிச் சாலை கலையரங்கம் பகுதியில் கிறிஸ்தவா்கள் சாா்பில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னா், க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் உறைபனி

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கடும் உறைபனி நிலவியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் பிப்ரவரி வரை கடும் பனிப் பொழிவு நிலவும். தற்போது, பருவநிலை மாற்றம் கா... மேலும் பார்க்க