செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
நிலத்தை விற்று கிரிக்கெட் பயிற்சி..! வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறியதாவது?
ஐபிஎல் தொடரில் 14 வயதில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை மகனுக்கு ஆதரவளித்த பிகார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவா்களில் 209/4 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 15.5 ஓவா்களில் 212/2 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தானின் 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தாா்.
ஐபிஎல் போட்டி வரலாற்றில் இது 2-ஆவது அதிவேக சதமாகும். முன்னதாக பெங்களூரு வீரா் கிறிஸ் கெயில் 2013-இல் புணே வாரியா்ஸுக்கு எதிராக 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளாா்.
இந்நிலையில் இவரது தந்தை அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிகாருக்கு பெருமை
வைபவ் சூர்யவன்ஷி எங்களது கிராமம், பிகார், இந்தியா முழுவதையும் பெருமைப்படுத்தியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கிறோம்.
கடைசி 3-4 மாதங்களாக சூர்யவன்ஷிக்கு விரிவாக பயிற்சியளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மெருகேற்றியதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட், உதவி பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள்.
வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி
வைபவ் சூர்யவன்ஷி மிகவும் கடினமாக உழைத்தான். அதன் பலன்தான் இந்த சதம்.
மாநில சீனியர் அளவில் இந்த இளம் வயதிலேயே விளையாட வாய்ப்பளித்த பிகாரின் கிரிக்கெட் தலைவர் ராகேஷ் திவாரி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இவர் பிகாரிலுள்ள சமஸ்திபூர் நகரைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ.30 லட்சம் அடிப்படை ஏலத்தில் இருந்து ரூ.1.30 கோடிவரை ஏலத்தில் எடுத்தார்கள் .
வைபவ் சூர்யவன்ஷியின் விளையாட்டு பயிற்சிக்காக தங்களது விவசாய நிலத்தை விற்று, செய்யும் தொழிலையும் விட்டு மகனுக்காக போராடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவன்கள் பலரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.