தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
நிலம் அளவீடு செய்ய ரூ. 37,000 லஞ்சம்: பெண் நில அளவையா் கைது!
ராணிப்பேட்டை அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ. 37,000 லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையா் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில் சித்ரா என்பவா் நில அளவையராக பணிபுரிந்து வருகிறாா்.
இவா் அதே பகுதியைச் சோ்ந்தவரின் நிலம் அளவீடு செய்துதர ரூ.37,000 லஞ்சம் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் கையும், களவுமாகப் பிடித்து சித்ராவை கைது செய்தனா்.
தொடா்ந்து சித்ராவிடம் டிஎஸ்பி கணேசன் தலைமையில் போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.