செய்திகள் :

'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?

post image

பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது.

அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் பிம்பம் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

வருகிற செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி 75 வயதை தொட உள்ளார்.

மோடிக்கு 75! 'அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்தா?'
மோடிக்கு 75! 'அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்தா?'

கடந்த 10 ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் தலைமையிடத்திற்கு செல்லாத மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.

இதனால், மோடிக்கு 75 வயதாக உள்ளது. அடுத்து என்ன என்பது போன்ற பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது.

அப்படி பிரதமர் பதவிக்கு ரேஸ் நடந்தால் நிச்சயம் அதில் யோகி ஆதித்யநாத் பெயர் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம், "நீங்கள் பிரதமராக ஆக வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு குறித்து உங்களுடைய கருத்து என்ன?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "நான் உத்தரப்பிரதேச முதலமைச்சர். கட்சி என்னை உத்தரப்பிரதேச மக்களுக்காக இங்கு அனுப்பியிருக்கிறது.

அரசியல் என்னுடைய முழு நேர பணி அல்ல. நான் ஒரு யோகி.

எவ்வளவு நாள் இங்கு இருக்கிறோமோ, அவ்வளவு நாட்கள் இங்கு உழைப்போம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு" என்று பதிலளித்துள்ளார்.

மணிப்பூர்: 'பிரச்னையை விவாதிக்க நடுராத்திரி 2 மணியா?' - மக்களவையில் கனிமொழி அடுக்கிய கேள்விகள்

2023-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, மணிப்பூரில் கலவரங்கள் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், இன்னமும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆளும் பாஜக அரசு என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது... அத்தனை கலவரங்களும... மேலும் பார்க்க

'திருக்குறளும், இந்தி பாடலும்' நிர்மலா சீதாராமன் Vs திருச்சி சிவா - மாநிலங்களவையில் சுவாரஸ்ய விவாதம்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்த கடுமையான விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் திமுக எம்... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய பாலிடிக்ஸ்

கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். முன்னதாக, அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க-வுக்கு நான்கு இடங்கள் கிடை... மேலும் பார்க்க

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்...' - பிரகாஷ் காரத்

``தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கா... மேலும் பார்க்க

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' - மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

"கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.." என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்மதுரையில... மேலும் பார்க்க