செய்திகள் :

``நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்'' - அமித்ஷாவுக்கு கனிமொழி பதில்

post image

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்படுவார்கள்' என்று பேசியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், இன்று அமித்ஷா ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், 'இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்காது. இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்' என்று பேசியிருக்கிறார்.

அமித்ஷா
அமித்ஷா

இதை குறிப்பிட்டு, திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அமித்ஷா, ``எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. ஆனால், நம் மொழியை போற்ற வேண்டும். நம் மொழியை பேச வேண்டும். நம் மொழியில் சிந்திக்க வேண்டும்'' என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்பத் சொல்வதென்ன?

"மொழிகளை வைத்து நம்மிடையே பிரிவினை உண்டாக்க நினைப்பவர்களுக்கு நாம் பலியாகக் கூடாது.." என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.அர்ஜுன் சம்பத்மதுரை எஸ்.எஸ்.காலனியிலுள்ள காஞ்சி மகா ... மேலும் பார்க்க

Newyork: ``100% கம்யூனிஸ்ட் பைத்தியம்..'' - இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப்

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்தியா வம்சாவளியான ஜோரன் மம்தானி போட்டியிட தேர்வாகி இருக்கிறார்.நவம்பர் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லி... மேலும் பார்க்க

Vaccine: இந்தியாவில் 14.4 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி போடவில்லையா? - அதிர்ச்சி தரும் ஆய்வு!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் சவாலை எதிர்கொள்ளும் தெற்காசிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. நாடுமுழுவதும் 2023-ம் ஆண்டு 14.4 லட்சம் குழந்தைகள் ஒரு தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாமல் இருந்தத... மேலும் பார்க்க

``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொல்லும் தகவல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் போது, ஏதேனும் உதவி வேண்டுமா என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது, அப்போது... மேலும் பார்க்க

``வெள்ளித் தட்டில் 600 பேருக்கு விருந்து; ஒரு பிளேட் சாப்பாடு ரூ.5000'' - அரசு செலவில் ஆடம்பரமா?

மும்பையில் பாராளுமன்ற மதிப்பீட்டுக்குழு கூட்டம் இரண்டு நாள்கள் நடந்தது. இந்த கூட்டம் மகாராஷ்டிரா சட்டமன்ற கட்டிடத்தில் நடந்தது. நாடு முழுவதும் இருந்து 600 பேர் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை பாரா... மேலும் பார்க்க