Vanangaan Public Review | FDFS | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!
நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வருடம் தோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவையொட்டி கடந்த 10 நாட்கள் பகல்பத்து உற்சவம் நடந்தது. இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.
இதனைமுன்னிட்டு அதிகாலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர் சீதா,லெட்சுமண, சந்தானராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களைச்சொல்லியும் நாலாயிரதிவ்யபிரபந்த பாராயணம் செய்தும் ஆராதனைகள் செய்தனர்.
தொடர்ந்து பரமபதவாசல் திறப்பு நடந்தது.பரமபதவாசல் திறப்பில் சீதா, லெட்சுமண சமேதராய் சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் ராபத்து உற்சவம் தொடங்கியது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.