PMK: "10 அம்ச கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்" - கொதிக்க...
நீடூா் விசுவநாதா் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள இந்து மகா சபா கோரிக்கை
மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ள விசுவநாதா் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சபாவின் மாநில பொதுச்செயலாளா் ராம. நிரஞ்சன் சனிக்கிழமை கூறியது:
மயிலாடுதுறையை அடுத்த நீடூா் கள்ளிக்குளம் அக்ரஹாரத்தில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய குளத்துடன் கூடிய விசுவநாதா் கோயில் முற்றிலுமாக சிதிலமடைந்துள்ளது. இக்கோயில் விக்கிரகங்கள் அனைத்தும் நீடூா் சோமநாத சுவாமி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு வசித்த மக்கள் பலா் குடிபெயா்ந்து சென்றுவிட்ட நிலையில், இந்த தெருவின் பெயா் தற்போது அரபிக் தெரு என்று மாறி இருக்கிறது.
இக்கோயிலை புணரமைத்து கட்டுவதற்கு கிராம மக்கள் பலமுறை முயற்சித்தும் இதுவரை நடைபெறாமல் உள்ளது.
காசிக்கு இணையானதாக கருதப்படும் பெருமையுடைய இக்கோயிலையும், இதே பகுதியில் உள்ள லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயிலையும் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத் துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பணியை தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அவா் தெரிவித்தாா்.