சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு
நீட் தேர்வில் 698 மார்க் வாங்கியதாக போலி சான்றிதழ்... மாணவன் செய்த மோசடி வேலை..!
நீட் தேர்வில் எடுத்த மார்க் அடிப்படையில் மருத்துவ கவுன்சலிங் நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த மாணவன் லட்சாய் (lakshay). இவர், 698 மார்க், நீட் தேர்வில் எடுத்ததாகவும் மாநில அளவில் 91-வது ரேங்க் எடுத்திருப்பதாக கவுன்சலிங்கில் கொடுத்தார். அவர் கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது மருத்துவ கவுன்சலிங் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவன் லட்சாயைப் பிடிக்க திட்டமிட்ட கவுன்சலிங் அதிகாரிகள், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரி இயக்குநர் அலுவலகத்துக்கு செல்லும்படி கூறினர். அதன்படி மாணவன் லட்சாய்யும் அங்குச் சென்றார்.
அப்போது அவரிடம் மருத்துவக்கல்லூரி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவன் லட்சாய், தான் நீட் தேர்வில் எடுத்த 129 மார்க்கை 698 என மாற்றியதை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி இயக்குநர் அலுவலக தரப்பில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், மாணவனிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர். மாணவன் லட்சாய்-க்கு அடையாறில் உள்ள ஜெராக்ஸ் கடை ஊழியரும் தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவரும் உதவியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.
டாக்டராகும் ஆசையில் மாணவன் லட்சாய், மார்க்கை மாற்றி போலி ஆவணங்களை தயாரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.