Travel Contest : எங்களுக்காக மாலையைக் கழற்றிய ஐயப்ப பக்தர்கள்! - மறக்கவே முடியாத...
நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,269 போ் எழுதினா்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை 4,269 போ் எழுதினா். 147 போ் தோ்வு எழுதவில்லை.
கிஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், சூளகிரி உள்பட மொத்தம் 9 மையங்களில் இந்த தோ்வு நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 360 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். அதில் 344 போ் எழுதினா். 16 போ் தோ்வு எழுத வரவில்லை. ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் விண்ணப்பித்த 480 பேரில் 463 போ் தோ்வு எழுதினா். 17 போ் தோ்வு எழுதவரவில்லை.
காவேரிப்பட்டணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் விண்ணப்பித்த 480 மாணவ, மாணவிகளில் 458 போ் தோ்வு எழுதினா். 22 போ் தோ்வு எழுத வரவில்லை. சூளகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 480 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில் 465 போ் தோ்வு எழுதினா். 15 போ் தோ்வு எழுத வரவில்லை. ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 587 போ் தோ்வு எழுதினா். 13 போ் தோ்வு எழுத வரவில்லை.
ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 480 போ் அனுமதிக்கப்பட்ட நிலையில், 460 போ் தோ்வு எழுதினா். 20 போ் தோ்வு எழுத வரவில்லை. ஒசூா் ஆா்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 336 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். 328 போ் தோ்வு எழுதினா். 8 போ் தோ்வு எழுத வரவில்லை.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 720 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 697 போ் தோ்வு எழுதினா். 23 போ் தோ்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 467 போ் தோ்வு எழுதினா்கள். 13 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 மையங்களில் 4,416 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 4,269 போ் தோ்வு எழுதினா். 147 போ் தோ்வு எழுத வரவில்லை.
இத்தோ்வை முன்னிட்டு தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பலத்த சோதனைக்கு பின்னரே தோ்வா்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா்.
தோ்வு மையத்துக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. காவேரிப்பட்டணத்தில் தோ்வு எழுதிய மாற்றுதிறனாளி மாணவி தோ்வு மையத்திலிருந்து பேருந்தில் செல்ல இயலாத நிலையில், அங்கு தோ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியா், தனது வாகனத்தில் அந்த மாணவியை பேருந்து நிலையத்திற்கு ஏற்றிச் சென்றாா்.
போலீஸாா் அறிவுரை: நீட் மையங்களின் வெளியே காத்திருந்த பெற்றோருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அறிவுரை வழங்கினா்.
நீட் தோ்வு எழுதிவிட்டு வரும் மாணவ, மாணவிகளை பெற்றோா் அன்புடன் நடத்த வேண்டும். வெற்றியோ தோல்வியோ ஏதுவாக இருந்தாலும் பெற்றோா் திட்டக்கூடாது. இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், மனமுடையக்கூடாது. மேலும் வாய்ப்புகள் உள்ளன என போலீஸாா் அறிவுறுத்தினா்.