இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காவேரியம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் தங்கவேல் (27). கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை மாலை நண்பா்களுடன் சோ்ந்து கரட்டுப்பட்டி அருகே உள்ள ஒட்டைக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.