செய்திகள் :

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

post image

சேலம்: கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர்வரத்து எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்குநீர் வரத்து அதிகரித்து நிரம்பிய நிலையில் உள்ளன. அணைகளில் பாதுகாப்புக் கருதிஉபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 60,740 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 73,452 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் காலை 112.73அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.84 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 4.16 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 22,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 88.59 டி.எம்.சி.யாக உள்ளது.

நீர்வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை வரலாற்றில் 45வது ஆண்டாக அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்: சீமான்

நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீக... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா !

அருப்புக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடிகை த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 28) ஒருசில இடங்களிலும், ப... மேலும் பார்க்க

கடனை செலுத்த வங்கி அதிகாரிகள் அழுத்தம்: பால் நிறுவன இயக்குநர் தற்கொலை!

கடனை செலுத்த தனியார் வங்கி அதிகாரிகளின் அழுத்தத்தால் தனியார் பால் நிர்வாக இயக்குநர் ஜே.ராஜபாண்டி தற்கொலை கொண்ட நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்... மேலும் பார்க்க

வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவையடுத்து வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த அமுல் கந்தசாமி, உடல்நலக் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி: தவெக

தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி என்று தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பத... மேலும் பார்க்க