செய்திகள் :

நீலகிரி: அம்மனுக்குப் புனித குடை; பூசாரிகளுக்குச் செங்கோல்; பரவசத்தில் ஆழ்த்திய ஹெத்தை திருவிழா!

post image

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மனை வழிபட்டு வருகின்றனர். மூதாதையரான‌ ஹெத்தையம்மனை வாழ்வின் அங்கமாகவே போற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும் 'ஹெத்தெ ஹப்பா' எனப்படும் ஹெத்தையம்மன் திருவிழாவை ஒட்டுமொத்த படுகர் சமுதாய மக்களும் ஒன்று கூடிக் கொண்டாடி வருகின்றனர்.

ஹெத்தையம்மன் திருவிழா
ஹெத்தையம்மன் திருவிழா

ஊட்டி அருகில் உள்ள ஜெகதளா கிராமத்தில் தற்போது ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. ஹெத்தைக்காரர்கள் எனப்படும் கோயில் பூசாரிகள் 48 நாட்கள் விரதமிருந்து குண்டம் இறங்கி அருள்வாக்கு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து ஜெகதளா மடியறை எனப்படும் பாறை ஹெத்தையம்மன் கோயிலிலிருந்து கன்னி ஹெத்தை கோயிலுக்கு அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பட்டுடுத்தி தரிசனம் அளித்த ஹெத்தையம்மனைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளை நிற ஆடையில் இசை, நடனம் என வழி நெடுகிலும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

ஹெத்தையம்மன் திருவிழா
ஹெத்தையம்மன் திருவிழா

ஹெத்தையம்மனுக்கு இணையாகச் சிறுமிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் அம்மனுக்கு உகந்த புனித குடைகளைப் பிடித்தும்‌ பூசாரிகள் செங்கோல் ஏந்தியும் வந்தது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`திருமணத்துக்குத் தயாராகுங்கள்'- வரப்போகும் முக்கியமான முகூர்த்த நாள்கள் இவைதான்

குரோதி வருடத்தின் தை மாதத்தில் இருக்கிறோம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை பிறந்ததும் சுபமுகூர்த்த நாள்களும் வரிசைகட்ட ஆரம்பிக்கும்.அப்படி இந்தக் குரோதி வருடத்தின் அடுத்த மூன்று மாதங்களில... மேலும் பார்க்க

'தென்கொரிய நாட்டு மாப்பிள்ளை... கரூர் பெண்’ - கரூரில் களை கட்டிய பொங்கல் விழா

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே நடையனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (28). பொறியியல் பட்டம் பெற்ற இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் போது, தென்கொரிய நாட்டைச... மேலும் பார்க்க

வெண்ணிற உடையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ; 9 பேருக்கு மட்டுமே குண்டம் இறங்க அனுமதி- ஏன் தெரியுமா?

ஹெத்தையம்மனுக்கு விழாநீலகிரி மாவட்டத்தில் பரவலாக வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் ஹெத்தையம்மன் எனும் மூதாதையரை குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஹெத்தைய... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மின்னலாய் பாய்ந்த காளைகள், அடக்கி வென்ற வீரர்கள் | Photo Album

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூ... மேலும் பார்க்க

ஊட்டி: ராஜ வேடம், பாரம்பர்ய இசையில் நடனம்; களைகட்டிய கோத்தர் பழங்குடிகளின் திருவிழா!

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த கோத்தர் இன‌ மக்கள் மட்பாண்ட கலையில் கைதேர்ந்த கலைஞர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இரும்பு பட்டறை நுட்பங்களையும் பல ஆண்டுகளாகப் பயன்... மேலும் பார்க்க