செய்திகள் :

``நீ பாஜக-வில் சேர்ந்தால், நான் விஷயம் குடிப்பேன்" - தந்தை பஸ்வான் மிரட்டியது குறித்து சிராக் பேச்சு

post image

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதத்துக்குப் பிறகு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பீகாரில் தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள்வரை தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.

இதற்கிடையில், என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான், மாநில அரசியலில் ஈடுபடப்போவதாகவும், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் பீகார் அரசியலில் நடந்துவந்த நிலையில், சிராக் பாஸ்வான், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முடிவு செய்யும் ஒரு தொகுதியில் போட்டியிடுவேன்" எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், அவர் மாநில அரசியலில் முழுமையாக ஈடுபடவிருக்கிறார் என்ற செய்தி உறுதியாகியிருக்கிறது.

சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வான்

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``என் தந்தை 2014 தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதைக் கடுமையாக எதிர்த்தார். 'நீ பா.ஜ.கவுக்குச் சென்றால் நான் விஷம் குடித்து இறந்துவிடுவேன்' எனக் கூறினார். அதனால் 2014-க்கு முன்பு எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தேன்.

2013 நவம்பர் முதல் 2014 பிப்ரவரி நடுப்பகுதி வரை மரியாதைக்குரிய சோனியா காந்தியைப் பலமுறை சந்தித்தோம்.

ஆனால் அவர் அப்போது காங்கிரஸின் தலைவராக இருந்த ராகுல் காந்தியைச் சந்தித்து பிரச்னைகளைச் சரி செய்துகொள்ளலாம் என்றார். ஆனால், இறுதிவரை ராகுல் காந்தியைச் சந்திக்கவே முடியவில்லை. அதன் பிறகே பா.ஜ.க-வில் இணைந்தேன்.

நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேனா என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள். 243 இடங்களிலும் என் கட்சி போட்டியிடும் என அறிவிக்கிறேன். நான் எனக்காக அல்ல, பீகார் மக்களுக்காகவே போட்டியிடுவேன்.

நான் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். எனது கூட்டணி பீகார் மக்களுடன் மட்டுமே. பீகாருக்காகவும், மாநில மக்களுக்காகவும்... மாநிலத்தின் பெருமைக்காகவும் நான் வாழ்ந்து இறப்பேன்" என்றார்.

ராம் விலாஸ் பஸ்வான்:

ராம் விலாஸ் பஸ்வான்
ராம் விலாஸ் பஸ்வான்

மத்தியச் சேவை அமைச்சர், பொருளாதார அமைச்சர், ரயில்வே, தகவல் தொழில்நுட்ப, கனிமப் பொருட்கள், நுகர்பொருள்கள் முதலிய துறை அமைச்சர் எனப் பல்வேறு துறை அமைச்சராக இருந்தவர் ராம் விலாஸ் பஸ்வான். சிராக் பஸ்வானின் கூற்றுப்படி 6 பிரதமர்களின் கீழ் ராம் விலாஸ் பஸ்வான் பணியாற்றியிருக்கிறார்.

தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான இவர், காங்கிரஸ் தலைமையிலான UPA-விலும் பின்னர், மோடி தலைமையிலான NDA-விலும் அமைச்சராக இருந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்தது. இதற்குப் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதற்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிராக் பஸ்வான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`கதர்க் கட்சிக்குத் தாவிய உடன்பிறப்பு டு உயரதிகாரி மீது கன்ட்ரோல் ரூமில் புகாரளித்த மனைவி’ | கழுகார்

சிக்கலில் காவல் உயரதிகாரி!கன்ட்ரோல் ரூமில் புகாரளித்த மனைவி...தலைநகரில், கடலோர வெள்ளை மாளிகையில் பணிபுரியும் டி.ஐ.ஜி அந்தஸ்திலுள்ள ஒரு காக்கி அதிகாரி, 'பல பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார்' என அவருடைய ... மேலும் பார்க்க

``அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இயற்கை விவசாயம் செய்ய போகிறேன்!” - மத்திய அமைச்சர் அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நரேந்திர மோடிக்கு 74 வயதாகிறது. எனவே 75 வயதில் ஓய்வு பெறக்கூடும் என்று கடந்த தேர்தல் முடிவுகளின் போதே பேசப்பட்டது. ஆ... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் ரோடு ஷோ: போஸ்டரால் வெளிவந்த டி.ஆர்.பி.ராஜா, கலைவாணன் ஆதரவாளர்கள் கோஷ்டி மோதல்?

முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் திருவாரூர் வந்தார். பின்னர் கா... மேலும் பார்க்க

`கோடிக்கணக்கில் ஊழல் செய்பவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்' - டாக்டர் கிருஷ்ணசாமி

காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு புதிய தமிழகம் கட்சியினர் மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.ஆர்பாட்டம்மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், சங்கரன்கோவிலில் முருகன், பாளை... மேலும் பார்க்க

``மாநில சுயாட்சி என்று உரிமை பேசும் முதல்வர் வழக்கை CBI-யிடம் ஏன் கொடுத்தார்?'' - சீமான் கேள்வி

சமீபத்தில் தமிழகத்தையே அதிர வைத்த காவல்துறையினரின் சித்திரவதையால் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணமடைந்ததற்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் நடந்த ஆர்பாட்டாத்தில் கலந்துகொள்ள வந்த சீமான், அதற்... மேலும் பார்க்க