திருச்சி: விடுதி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை; பாதிரியார் உள்ளிட்ட இருவர் கைது...
நூர் அகமதை பாராட்டிய இந்திய சுழற்பந்துவீச்சாளர்!
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமதை இந்திய அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பாராட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான நூர் அகமது, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், நூர் அகமது தனது அபார பந்துவீச்சின் மூலம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.
குல்தீப் யாதவ் பாராட்டு
சிஎஸ்கே அணிக்காக நூர் அகமது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நிலையில், நூர் அகமது அனைவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக குல்தீப் யாதவ் அவரை பாராட்டியுள்ளார்.
இதையும் படிக்க: மும்பை அணிக்காக 100-வது போட்டியில் சூர்யகுமார் யாதவ்!
நூர் அகமது குறித்து குல்தீப் யாதவ் பேசியதாவது: நூர் அகமது மிகவும் நன்றாக பந்துவீசுகிறார். அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாக தெரியும். அவர் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள விரும்பும் நபர். போட்டி நிறைவடைந்த பிறகு இரவு நீண்ட நேரம் நாங்கள் பேசியிருக்கிறோம். நூர் அகமதுவுடன் அமர்ந்து லெக் ஸ்பின் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டுள்ளேன். நூர் அகமது பந்துவீச்சில் வேகம் இருக்கும். அதனால், அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் அவ்வளவு எளிதாக ரன்கள் குவித்துவிட முடியாது. அதிலும் குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் திடலில் அவரது பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் திடலில் நாளை (ஏப்ரல் 5) நடைபெறும் போட்டியில் தில்லி கேபிடல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.