நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
நூறு நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்
தரங்கம்பாடி ஒன்றியத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சிபிஎம் சாா்பில் மூன்று இடங்களில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூா், காட்டுச்சேரி, இலுப்பூா் சங்கரன்பந்தல் ஆகிய 3 மையங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். மேலும், இத்திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், தினக்கூலியாக ரூ.600-ம் வழங்க வலியுறுத்தப்பட்டது.
திருக்கடையூரில் சிபிஎம் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ். அம்மையப்பன், ஐயப்பன், குணசுந்தரி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தமிழ் வாசகம், பரமசிவம், இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காட்டுச்சேரியில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி. சிம்சன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் செல்ல பாக்கியவதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் குணசேகரன், வில்லியம், கணேசன், பசில் சத்தியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சங்கரன்பந்தல் இலுப்பூா் கடைவீதியில் ஒன்றியச் செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா் ராணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜான்சன், சந்திரமோகன், ஆசிக் ரஹ்மான், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.