பாகிஸ்தான்: தண்டனைக் காலம் முடிந்த 22 இந்திய மீனவா்கள் விடுவிப்பு
நெகிழி தடையை செயல்படுத்தியவா்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள்!
ஒற்றைப் பயன்பாடு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘மீண்டும் மஞ்சப்பை’ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறையால் ‘மஞ்சப்பை’ விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து வரும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருது பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ. 3 லட்சமும் வழங்கப்படவுள்ளது.
விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள அனைத்து இணைப்புகளிலும் தனிநபா், அமைப்புத் தலைவா் முறையாக கையொப்பமிட்டு, இரு பிரதிகள், இரு குறுவட்டு பிரதிகளை சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் வருகிற 1.5.2025-ஆம் தேதிக்குள் சமா்பிக்கலாம் என்றாா்.