Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
நெகிழி பைகளை பதுக்கிய கடைக்கு அபராதம்
களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பதுக்கி வைத்து பயன்படுத்திய கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலா் ராஜேஷ் தலைமையில் ஊழியா்கள் மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் அங்குள்ள ஒரு கடையில் நெகிழிபைகள் பதுக்கி வைத்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது . அங்கிருந்த நெகிழி பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.