செய்திகள் :

``நெஞ்சைப் பதற வைக்கிறது...'' - அண்ணா பல்கலைக்கழகம் மாணவி சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம்

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் நேற்று பரபரப்பை கிளப்பியது.

இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், எப்.ஐ.ஆரில் அந்தப் பெண்ணின் பெயர் பதியப்பட்டுள்ளது என்றும், அந்த எப்.ஐ.ஆர் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் இன்று காலை முதல் தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை அண்ணா‌ பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

அண்ணா பல்கலை

பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை: ``யார் அந்த சார்னு தெரியணும்.." - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக் கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரிப்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணமலை சாட்டையால் ... மேலும் பார்க்க

Manmohan Singh: `9 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு கேட்ட கேள்வி' -மெய்சிலிர்த்த மருத்துவர் பகிர்வு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009-ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்த காலத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 10 முதல் 11 மணிநேரம் நீண்ட அந்த சிகிச்சைக்குப் பிறகு முதலில் அவர் கேட்டுத் தெரிந்துகொண்டத... மேலும் பார்க்க

மாறிய சாட்டை, வேடிக்கை பார்த்த நிர்வாகிகள்... அண்ணாமலை சாட்டையடி நிகழ்வு.. நடந்தது என்ன?

“திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், திமுகவை கண்டித்து எனக்கு நானே சாட்டையடி கொடுத்துக் கொள்ளப் போகிறேன்.” என்று பாஜக மாநில... மேலும் பார்க்க

Manmohan Singh: ``எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிய காரணம் என்ன?'' -மன்மோகன் சிங் சொன்ன பின்னணி

இந்தியாவின் பொருளாதார சிற்பி எனப் புகழப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92-வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

கட்சி நன்கொடை: பாஜக-வுக்கு ரூ.2244 கோடி, காங்கிரஸுக்கு ரூ.289 கோடி; மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு...?

பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க தேர்தல் பத்திரம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. அதன் மூலம் அரசியல் கட்சிகளை மிரட்டி பா.ஜ.க பணம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்... மேலும் பார்க்க

Manmohan Singh: `திடீர் உடல் நலக்குறைவு; காலமானார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்'

இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.Manmohan Singhமன்மோகன் சிங் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார். அதேமாதிரி, 90 களில் நிதிய... மேலும் பார்க்க