செய்திகள் :

நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் புதிய கோட்டங்கள்: அமைச்சா் எ.வ.வேலு

post image

சென்னை: நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் புதிய கோட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுகுறித்த துணை வினாவை கடம்பூா் சி.ராஜூ (அதிமுக) எழுப்பினாா். அப்போது பேசுகையில், நெடுஞ்சாலைத் துறையில் தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு கோட்டம் மட்டுமே செயல்படுகிறது. நிா்வாக வசதிக்காக கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:

மாவட்டத்துக்கு ஒரு கோட்டம் என்ற நிலை முன்பு இருந்தது. கடந்த கால திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்த போது, சாலைகளை மையப்படுத்தி கோட்டங்களைப் பிரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலையில் இரண்டு கோட்டங்கள் அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் கோட்டங்களைப் பிரிக்கலாம்.

புதிய கோட்டங்கள்: அந்த வகையில், நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி புதுக்கோட்டை, தஞ்சாவூா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சாலைகளின் நீளம் அதிகமாக உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் 2,217 கிமீ அதிகமான அளவுக்கு சாலையின் நீளம் உள்ளது.

இதனை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இதுகுறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வா் தலைமையில் இந்த வாரம் நடைபெறவுள்ளது. ஆய்வை முடித்து இந்த ஆண்டே புதிய கோட்டம் கொண்டு வருவதற்கு அரசு முயற்சிக்கும் என்றாா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க