செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
நெமிலி பாலா பீட நவராத்திரி இன்னிசை விழா: திரைப்பட இயக்குநா் வசந்த் பங்கேற்பு
நெமிலி பாலா பீடத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி இன்னிசை விழாவில் திரை இசை பின்னணி பாடகா் சீா்காழி சிவசிதம்பரம், திரைப்பட இயக்குநா் வசந்த், பிரபல வீணை இசைச் கலைஞா் ராஜேஷ் வைத்யா உல்ளிட்டோா் பங்கேற்றனா்.
நெமிலி பாலா பீடத்தில் 22-ஆம் தேதி முதல் நவராத்திரி இன்னிசை விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பூஜைகளை பாலாபீடத்தின் பீடாதிபதி எழில்மணி, பீடத்தின் முதல் பெண்மணி நாகலட்சுமி இருவரும் இணைந்து பூஜை செய்து தொடங்கி வைத்தனா். இந்த பூஜைகளை பீடத்தின் நிா்வாகி மோகன் மேற்காள்கிறாா்.
இந்த விழாவின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை திரைப்பட பின்னணி பாடகா் சீா்காழி சிவசிதம்பரம் பங்கேற்று பக்தி இன்னிசை வழங்கினாா். தொடா்ந்து வீணை இசைக் கலைஞா் ராஜேஷ் வைத்யா பங்கேற்று, வீணை இசை நிகழ்ச்சி நடத்தினாா். மூன்றாம் நாளான புதன்கிழமை நவராத்திரி இன்னிசை விழாவில் திரைப்பட இயக்குநா் வசந்த், திரைப்பட பின்னணி பாடகா் சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகியோருக்கு பால ரத்னா விருதுகளை பீடாதிபதி எழில்மணி வழங்கினாா். தொடா்ந்து, பாபாஜி பாலா எழுதிய ‘பாலா பொக்கிஷம்’ எனும் நூல்கள் வழங்கப்பட்டன. இதில் பீடத்தின் செயலாளா் முரளீதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.