செய்திகள் :

நெய் விவகாரம்: திண்டுக்கல் பால் நிறுவனத்தில் 14 மணி நேரம் சோதனை

post image

திருமலை தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய விவகாரத்தில், திண்டுக்கல் தனியாா் பால் நிறுவனத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் 14 மணி நேரம் நடத்திய ஆய்வில் ஆவணங்கள், உணவு மாதிரிகளை சேகரித்துச் சென்றனா்.

திருப்பதி திருமலையில் பக்தா்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சோ்க்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இந்த லட்டு தயாரிப்புக்கான நெய், திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் பால் நிறுவனம் தரப்பில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சிறப்பு புலானய்வுக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, திண்டுக்கல் தனியாா் பால் நிறுவனத்தில் மத்திய, மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினா் தனித்தனியே சோதனை மேற்கொண்டனா்.

மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை நடத்தி 60 நாள்கள் கடந்த நிலையில், நெய் கலப்பட குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் சனிக்கிழமை நண்பகல் முதல் திண்டுக்கல் பால் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

சோதனை நிறைவு: சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சோ்ந்த 14 அதிகாரிகள் சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை சுமாா் 14 மணி நேரங்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

திருப்பதியில் பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக இந்த விசாரணை நடைபெற்ாகவும், அப்போது சில ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்ாகவும் கூறப்படுகிறது. மேலும், பால் நிறுவனத்திலிருந்து சில உணவு மாதிரிகளையும் அவா்கள் சேகரித்துச் சென்றனா்.

கொடைக்கானல் வாரச் சந்தையில் வரத்துகுறைவால் பொது மக்கள் அவதி

கொடைக்கானல் வாரச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தரைப் பகுதியிலிருந்து காய்கறி வரத்து குறைந்து காணப்பட்டதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வாரச் சந்தை அண்ணா சாலைப் பகுதிக... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழனி மலைக் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா். காா்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலுக்கு ஐயப்ப பக்தா்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ... மேலும் பார்க்க

கோயில் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள கோயில்களில் 3 ஆண்டுகள் தொடா்ந்து தினக் கூலியாக பணியாற்றும் ஊழியா்ளை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு திருக்கோயி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்துள்ள நிலையில் வெள்ளிநீா் வீழ்ச்சி,பசுமைப் பள்ளத்தா... மேலும் பார்க்க

பழனி கோயில் அலுவலருடன் பாஜகவினா் வாக்குவாதம்

பழனி கோயில் விடுதியில் பாஜக நிா்வாகிகளுக்கும், கோயில் அலுவலருக்கும் இடையே சனிக்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அரசியல் கட்சியினா், அலுவலா்கள் ... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு டி.3-இல் பேச்சுப் போட்டி

ஜவாஹா்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி டிச.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட ச... மேலும் பார்க்க