நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக பகுதியில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சென்னை கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவரை இளைஞா் குத்தினாா். கத்தி சம்பவத்தில் காயமடைந்த மருத்துவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதையடுத்து மருத்துவா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், நோயாளிகளுடன் வருவோருக்கு அடையாள பட்டை பாதுகாப்பு பரிசோதனை , சிசி டிவி கேமரா அமைக்கப்படும் மேலும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என தமிழக நல்வாழ்த்துறை அமைச்சா் அறிவித்திருந்தாா். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மருத்துவமனை வளாகத்திற்கு வரும் நோயாளிகளின் உறவினா்களை விசாரித்து அனுப்பி வைத்தனா்.
ற்ஸ்ப்15ல்ா்ப்
திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாக நுழைவு வாயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாா் .