செய்திகள் :

நெல்லை கார் விபத்தில் 7 பேர் பலி: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!

post image

நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநர் மாரியப்பன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டம் தளபதிசமுத்திரம் பகுதி-1 கிராமம், கீழூர் வீரநங்கை அம்மன் கோவில் அருகில் திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (27.4.2025) மாலை சுமார் 5 மணியளவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த TN72 BP 2351 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்றின் மீது, திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்துகொண்டிருந்த TN02 AX 0321 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று தடம் மாறி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேற்படி வாகனங்களில் பயணம் செய்த 16 நபர்களில் திருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை வட்டம், டக்கரம்மாள்புரம், விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் (வயது 68) த/பெ.பாலையா, மார்கரெட் மேரி (வயது 60) க/பெ.தனிஸ்லாஸ், ஜோபர்ட் (வயது 40) த/பெ.தனிஸ்லாஸ், அமுதா (வயது 35) க/பெ.ஜோபர்ட், குழந்தைகள் ஜோபினா (வயது 8), ஜோகன் (வயது 2) மற்றும் இராதாபுரம் வட்டம், கன்னங்குளத்தைச் சேர்ந்த மேல்கேஸ் (வயது 60) த/பெ.ஜேசு ஆகிய 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாலகிருஷ்ணவேனி (வயது 36), அன்பரசி (வயது 32), பிரியதர்ஷினி (வயது 23), சுபி.சந்தோஷ் (வயது 21), அட்சயாதேவி (வயது 19), பிரவீன் (வயது 10) மற்றும் அஸ்வின் (வயது 8) ஆகிய 7 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வினா-விடை வங்கி... சந்திப்பிழை

சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக1. அ) மருத்துவப் படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.ஆ) மருத்துவ படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.இ) மருத்துவப் படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்.ஈ) மருத்துவ படி... மேலும் பார்க்க

திருப்பதி அருகே லாரி - கார் மோதியதில் 5 பேர் பலி! ஒசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்!!

திருப்பதி மாவட்டம் பக்கலா நகரம் தோட்டப்பள்ளி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் ... மேலும் பார்க்க

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(ஏப். 28) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,343.63 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.41 மணியளவில், சென்செக்ஸ் 8... மேலும் பார்க்க

நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி

நாட்டிற்கே முன்னோடியாக திராவிட மாடல் திட்டங்கள் திகழுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ம... மேலும் பார்க்க

ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

சேலம்: ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் சமூக ஆா்வலா் சுட்டுக்கொலை

ஸ்ரீநகா்: பஹல்காம் தாக்குதலுக்கு நான்கு நாள்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆா்வலா் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப... மேலும் பார்க்க