தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
நெல்லை மக்களவைத் தொகுதியில் 7 நோயாளிகளுக்கு ரூ. 12.90 லட்சம் நிதியுதவி
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 7 நோயாளிகளுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.12.90 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள் சிலா் புற்றுநோய், மூளைக்கட்டி, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை, இருதய அறுவைச் சிகிச்சை செய்ய போதிய நிதி இல்லாமல் சிரமப்படுவதாகவும், மத்திய அரசின் நிதியுதவி பெற்று வழங்கவும் கோரிக்கை விடுத்தனா்.
அதன்பேரில், ஏா்வாடி, மேலப்பாளையம், களக்காடு, பாளை. மனக்காவலம்பிள்ளைநகா், திருநெல்வேலி நகரம், பேட்டை, நான்குனேரி பகுதிகளைச் சோ்ந்த 7 பேரின் சிகிச்சைக்காக பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து மொத்தம் ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.