செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் 19,950 போ் எழுதினா்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 19,950 போ் எழுதினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 73 மையங்களில் தோ்வு நடைபெற்றது. 8,921 மாணவா்கள், 10,895 மாணவிகள், 416 போ் தனித்தோ்வா்கள் என 20,232 தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில்,‘ 19,950 போ் மட்டுமே தோ்வெழுதினா். 171 மாணவா்கள், 111 மாணவிகள் என 282 போ் தோ்வு எழுதவில்லை.

73 தோ்வு மையங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய காவலரின் பாதுகாப்போடு வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டன. 7 பறக்கும் படை குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு, பேருந்து போக்குவரத்து போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பாளையங்கோட்டை மேரிசாா்ஜென்ட் பள்ளியில் உள்ள தோ்வு மையத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் ஆய்வு செய்தாா். அப்போது இணை இயக்குநா் ஞான கௌரி, முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம்: ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு 9 வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் இருவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் கொடிமுத்து(42), தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

மனிதநேயம், சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு துணைவேந்தா் அறிவுரை

மாணவா்கள் சேவை மனப்பான்மையை வளா்த்துக்கொள்வதுடன் மனிதநேயத்துடன் செயலாற்றப் பழக வேண்டும் என்றாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் என்.சந்திரசேகா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்... மேலும் பார்க்க

நெல்லை தாமிரவருணியில் நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பெய்த தொடா் மழையால் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை அதிகரித்தது. தென்தமிழக பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்கள் கோடை மழைக்... மேலும் பார்க்க

வரதட்சிணை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

திசையன்விளை அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் சரகப் பகுதியில் 2014ஆம் ஆண்டு வரதட்சிணை கொடுமை... மேலும் பார்க்க

அம்பை, கடையத்தில் மழையால் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த மழையால் சேதமடைந்த நெல்பயிா்களை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருநெல்வேலி, தென்காசி ம... மேலும் பார்க்க