அம்பை, கடையத்தில் மழையால் பயிா்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு
அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த மழையால் சேதமடைந்த நெல்பயிா்களை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரு நாள்கள் பெய்த கோடை மழையால் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கடையம், ஆழ்வாா்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல்பயிா்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இதனால், கவலையடைந்த விவசாயிகள், பயிா்களுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் கோவில்குளம் பகுதியில் வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பயிா்ச் சேதங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து சேதங்கள் குறித்து கணக்கீடு செய்தனா்.