கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
வரதட்சிணை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது
திசையன்விளை அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் சரகப் பகுதியில் 2014ஆம் ஆண்டு வரதட்சிணை கொடுமை தொடா்பான வழக்கில், திசையன்விளை, சண்முகபுரத்தைச் சோ்ந்த கணேசன் (58) என்பவா் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தாா்.
பின்னா் இவா், கடந்த 6 மாதமாக இவா் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாராம். ராதாபுரம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், அவரை வள்ளியூா் மகளிா் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா்.